Apr 03

கிரண்பேடியை மாற்றும்படி ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம்

புதுவையில் ஆளுநர்   கிரேண்பேடி மீதான அதிருப்தி காரணமாக அவரை மாற்ற வலியுறுத்தி சபாநாயகர் வைத்தியலிங்கத்திடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தை அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதுவை மாநிலம் யூனியன் பிரதேசம் என்பதால் இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையை விட ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் உள்ளது.

இதை பயன்படுத்தி ஆளுநர் கிரண்பேடி அரசின் பல்வேறு நடவடிக்கைகளிலும் தலையிட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.