Apr 03

இலங்கை வருகின்றார் ஆஸி.சர்வதேச அபிவிருத்தி அமைச்சர்

உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசிபிக் அமைச்சர் கொன்ஷிடா  பிர்வென்டி வெல்ஸ் 04-4-2017 செவ்வாய்க்கிழமை இலங்கை வருகின்றார். 

எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருடன் சந்திப்புகளில் கலந்துக் கொள்ள உள்ளார். 

அவுஸ்திரேலிய சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசிபிக் அமைச்சரின் இலங்கைக்கான முதலாவது உத்தியோகப்பூர்வ வியஜம் என்பதால் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு முக்கியமாக அமையும் என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தாணிகராலயம் தெரிவித்துள்ளது.