Apr 03

100 பேர் சமாதான நீதிவான்களாக நியமனம்

 முப்படைகளிலும் சிறந்த  சேவையாற்றிவிட்டு தற்போது ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருக்கும் வீரர்களாக இருக்கின்றவர்களை சமூக பணியில் இணைத்துக்கொள்ளும் நோக்கில் ஓய்வு பெற்ற இராணுவ சேவையாளர்கள் உட்பட 100 பேருக்கு சமாதான நீதிவான் பதவி வழங்கவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

 இந்நிகழ்வு நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தலைமையில் 5 ஆம் திகதி 12 மணியளவில் நீதி அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ளது.

 1978 (02 ) இலக்க நீதிமன்றங்கள் ஒருங்கமைப்புச் சட்டத்தின் 45 ஆவது அத்தியாயத்தின் பிரகாரம் நீதி அமைச்சருக்கு வழங்கப்பட்டுன்ன அதிகாரத்தினை பயன்படுத்தி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவிக்கின்றது