Mar 02

காணிகளை துப்பரவு செய்யும் கேப்பாபிலவு மக்கள்

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் அடை மழைக்கு மத்தியிலும் தமது காணிகளை துப்பரவாக்கும் பணியினை முன்னெடுத்தனர்.


தமது காணிகளில் சிறுகூடாரங்களை தரப்பாள்களை கொண்டு அமைத்து வசித்துவருவதையும் அவதானிக்கமுடிந்தது. 


கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை அனைத்தும் விடுவிக்கப்படவேண்டுமென கோரி கடந்த ஒருமாதகாலமாக வீதியில் போராடி வந்த நிலையில் நேற்று மக்களுக்கு சொந்தமானான  நிலங்கள் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.