Aug 19

பார்சிலோனா தாக்குதல்: கனேடியர்களுக்கு பாதிப்பில்லை

பார்சிலோனாவில் மேற்கொள்ளப்பட்ட மிகவும் கொடூரமான பயங்கரவாத தாக்குதலில், கனேடியர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை என்று கனேடிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பார்சிலோனா நகர் ஒன்றின் மத்திய பகுதியில், சுற்றுலா பயணிகள் கூடியுள்ள இடம் ஒன்றில வாகனத்தினைத் தாறுமாளாக செலுத்தி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்து்ளளனர்.

இவ்வாறான நிலையிலேயே இந்தச் சம்பவததில் கனேடியர்கள் நேரடியாக பாதிப்படையவில்லை என்று கூறியுள்ள வெளியுறவு திணைக்களம், பார்சிலோனாவில் உள்ள கனேடியர்களுக்கு வேண்டிய உதவிகளை வழங்குவதற்கு அங்குள்ள கனேடிய தூதரகம் தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளது.

இதேவேளை தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட குறித்த அந்த பிராந்தியத்திற்கு செல்வதனை கனேடியர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், ஏள்கனவே அந்த பிராந்தியத்தில் உள்ளவர்கள் வீடுகளை பூட்டிவிட்டு உள்ளே பத்திரமாக இருக்குமாறும் கனேடிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன் ஏற்கனவே ஸ்பெய்னில் உள்ள கனேடியர்கள், தமது உறவினர்களை அழைத்து, தாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற தகவலை உறுதிப்படுத்துமாறும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.