Aug 18

புற்றுநோயால் உயிரிழந்த மகள்: அஞ்சலி செலுத்த சென்ற தந்தைக்கு நிகழ்ந்த துயரம்

அதில், ‘நாங்கள் எதிர்பார்த்ததை விட நோய் வேகமாக பரவி வருகிறது. இன்னும் சில வாரங்கள் தான் உங்கள் மகள் உயிரோடு இருப்பார்’ என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், துரதிஷ்டவசமாக ஞாயிற்றுக்கிழமை தந்தைக்கு மீண்டும் மற்றொரு தகவல் கிடைத்துள்ளது.

அதில், ‘உங்கள் உறவினர்கள் அனைவருக்கும் தகவல் அளித்து விட்டு மருத்துவமனைக்கு வாருங்கள்.

உங்கள் மகள் இன்னும் சில மணி நேரத்தில் உயிரிழந்து விடுவார்’ என மருத்துவர்கள் தெரிவித்தபோது தந்தை கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

தன்னுடைய ஆசை மகள் வரைந்த வரைப்படங்கள், அவருக்கு பிடித்த விலைமதிப்பற்ற பொருட்கள் என அனைத்தையும் காரில் ஏற்றுக்கொண்டு தந்தை மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

தந்தை மருத்துவமனையில் இருந்தபோது செவ்வாய்க்கிழமை காலை அவரது மகளின் உயிர் பிரிந்துள்ளது.

மகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு தனது காருக்கு திரும்பியபோது அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

காரின் கதவுகள் திறந்திருக்க உள்ளே வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களும் திருடு போயுள்ளன.

மகளின் நினைவிற்காக கொண்டு வந்த பொருட்கள் அனைத்தும் திருடுப்போனதை தொடர்ந்து இது தொடர்பாக அவர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

மகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்றபோது அவருடைய பொருட்களை திருடியுள்ள சம்பவம் அந்நகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.