Apr 03

ஜே.ஆரின் மகன் ரவி ஜெயவர்தன காலமானார்

முன்னாள ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் மகன் ரவி விமல் ஜெயவர்தன இன்று காலமானார். தனது 80வது வயதில் இன்றைய தினம் அவர் காலமானார். 

கொழும்பில் உள்ள அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்தே அவர் இன்றைய தினம் காலமானார் என அவரது குடும்ப வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரவி விமல் ஜெயவர்தன, விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போராடுவதற்காக விசேட அதிரப் படையை நிறுவியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் தந்தைக்கு பாதுகாப்பு  ஆலோசகராகவும் அவர் இருந்துள்ளார்.