Aug 18

இரண்டு சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அதிரடி விலை குறைப்பு

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A7 (2017) மற்றும் A5 (2017) மாடல்களின் இந்திய விலை நிரந்தரமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் ரூ.26,900க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சாம்சங் கேலக்ஸி A5 (2017) தற்சமயம் ரூ.22,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ரூ.30,900 விலையில் விற்பனை செய்யப்படும் சாம்சங் கேலக்ஸி A7 (2017)  தற்சமயம் ரூ.25,900க்கு விற்பனை செய்யப்படும்.

இத்துடன் IP68 சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்ஸி A7 (2017) சிறப்பம்சங்கள்:

- 5.7 இன்ச் 1920x1080 FHD டிஸ்ப்ளே

- 1.9 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர்

- 3 ஜிபி ரேம்

- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- 16 எம்பி பிரைமரி கேமரா

- 16 எம்பி செல்ஃபி கேமரா

- டூயல் சிம் ஸ்லாட்

- 2ஜி, 3ஜி, 4ஜி 

- யு.எஸ்.பி. 2.0

- ப்ளூடூத், வைபை

- 3600 எம்ஏஎச் பேட்டரிசாம்சங் கேலக்ஸி A5 (2017) சிறப்பம்சங்கள்:

- 5.2 இன்ச் 1080x1920 பிக்சல் டிஸ்ப்ளே 

- 1.9 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர்

- 3 ஜிபி ரேம்

- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- 16 எம்பி பிரைமரி கேமரா

- 16 எம்பி செல்ஃபி கேமரா

- டூயல் சிம் ஸ்லாட்

- 2ஜி, 3ஜி, 4ஜி 

- யு.எஸ்.பி. 2.0

- ப்ளூடூத், வைபை

- 3000 எம்ஏஎச் பேட்டரி

மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி A5 (2017)  ரூ.28,990க்கும், சாம்சங் கேலக்ஸி A7 (2017) ரூ.33,490க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் கேலக்ஸி எஸ்7 சாரந்த வடிவமைப்பு மற்றும் குறைவான வெளிச்சம் இருக்கும் பகுதிகளிலும் தலைச்சிறந்த புகைப்படங்களை எடுக்க வழி செய்யும் கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.