Apr 03

வண்ணக் கடற்கரை!

போலந்து நாட்டின் பால்டிக் கடற்கரைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். சூரியக் குளியல் எடுப்பவர்கள் தங்களுக்கென்று தனி இடத்தை ஒரு துணியால் மறைத்துக்கொள்கின்றனர். கடற்கரை முழுவதும் பல வண்ணத் துணிகளால் மறைக்கப்பட்டிருக்கின்றன.

“போலந்து கடற்கரையில் ஒவ்வொரு குடும்பமும் துணிகளைத் தடுப்புகளாக வைத்து, தங்கிக்கொள்வது பல காலமாகவே நடைபெற்று வருகிறது. ஆனால் சமீபத்தில்தான் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

விடுமுறை நாட்களில் கடற்கரைக்கு மக்கள் குவிவார்கள். தங்கள் பொருட்களைப் பத்திர மாகப் பாதுகாப்பதும் நிம்மதியாகச் சூரியக் குளியல் எடுப்பதும் கஷ்டமாக இருக்கும். அதனால் அவரவர் வசதியைக் கருத்தில் கொண்டு நீண்ட துணிகளை இரும்புக் கம்பிகளில் கட்டி, தடுப்புகளை அமைத்துக்கொள்கிறோம்.

கடற்கரையில் மணலே தெரியாமல் வண்ணத் துணிகளாகவே தெரியும் அளவுக்கு எல்லோரும் தடுப்பு களைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். அடிக்கடி இங்கு வேகமாகக் காற்று வீசும். அப்போது உடல் முழுவதும் மணலாகிவிடும். தடுப்புகளால் மணல் பறப்பதும் தடுக்கப்படுகிறது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் முதலில் தடுப்புகளைக் கண்டு திகைத்தாலும் வேறுவழியின்றி அவர்களும் தடுப்புகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிடுகின்றனர்.

சீசன் காலங்களில் இடம் கிடைப்பதுதான் கஷ்டமாக இருக்கிறது. தடுப்புத் துணிகள் விற்பனை ஒரு தொழிலாக மாறிவிட்டது. மணிக்கணக்கில் வாடகைக்குத் தடுப்புகளை எடுத்துக்கொள்ளலாம்” என்கிறார் போலந்து பயணி அலெக்ஸி.