Aug 18

பொக்ஸ் குறூவ் முதியோர் சங்கம் நடாத்தும் 150வது ஆண்டு தினக் கொண்டாட்டம்!

மார்க்கம் மாநகரில் உள்ள “பொக்ஸ் குறூவ்” முதியோர் சங்கத்தினர் கனடாவின் 150வது பிற ந்த தினவிழாவினை எதிர்வரும் 23ம் திகதி புதன்கிழைம மாலை கோலாகலமாக கொண்டாட உள்ளனர்.

இவ்விழாவில் மார்க்கம்மாநகர சபை உறுப்பினர் திரு.லோகளன் கணபதி ரொறண் டோ மாநகர சபை உறுப்பினர் திரு.நீதன் சான்ஆகியோர் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

இவ்விழாவிற்கு முன்னோடியாககடந்த புதன்கிழமை மாலை முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்;டிகள் நடைபெற்றன. இதில் ஒன்ராறியோமாகாணத் திற்கான ஸ்ரீ லங்கா அரசாங்கத்தின் முன்னாள் தூதுவரான திரு.பூலோகசிங்கமும் பாரியாரும்கலந்து சிறப்பித்தனர்.

சங்கத் தலைவி திருமதி இராஜேஸ்வரி யோகராஜாதனாதிகாரி திரு.வி.சண்முகநாதன் செயலா ளர் திருமதி சகுந்தலாதேவி சச்சிதானந்தன்யோகா பயிற்சிஆசிரியை திருமதி மாலினி பரரா சசிங்கம் ஆகியோர் போட்டி நிகழ்ச்சிகளை சிறப்புற நடாத்துவதற்குஉதவி செய்தனர்.

முதி யோர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் ஓட்டப் போட்டி  பலூண் ஊதி உடைத்தல்ஆகியன உட்பட மற்றும் பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இவற்றில் வெற்றி ஈட்டியோருக்கான பரிசளிப்புஅடுத்த வார நிகழ்ச்சியில் இடம்பெறும்.

கனடாவின் 150வது ஆண்டு தினக்கொண்டாட்டத்தினை முன்னிட்டு அரசாங்கம் முதியோர்களுக் கான விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதற்குநிதியுதவி வழங்கி உள்ளமை பாராட்டுக்குரிய தும்  வரவேற்கத் தக்கதுமாகும்.

ஆரசாங்கத்தினதும்  முதியோர்சங்கங்களினதும் நடவடிக்கைகளி னால் முதியோர்கள் நோய் நொடி இன்றி மகிழ்ச்சியாகவும்  சுகதேகிகளாகவும் வாழ்ந்து வருவது குறிப்பிடத் தக்கது. விழாவில் கலந்து கொண்ட முதியோர்கள் யோகப்பயிற்சியிலும் ஈடுபட்டனர்.