Mar 02

இறக்குமதியின் கொள்ளளவை குறைப்பதே இலக்கு

இலக்வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சீனியின் கொள்ளளவினை வெகுவாக குறைப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

லங்கா சீனி கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தின் கீழே இயங்கிவரும் பெல்வத்த சீனி தொழிற்சாலையையும் செவனகல சீனி தொழிற்சாலையையும் நவீன தொழில் முறைகளைப்பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலே நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோன்று மூடிக்கிடக்கும் கந்தளாய் சீனி தொழிற்சாலையையும்ஆரம்பிக்க முயற்சிக்கிறோம் என அமைச்சர் தெரிவித்தார்.

லங்கா சீனி கூட்டுத்தாபனத்தை நாம் பொறுப்பேற்றபோது அதிக நஷ்டத்தில் இயங்கியது. எனினும், புதிய நிர்வாகத்தின்ஒத்துழைப்புடன் ஒரு பில்லின் நஷ்டத்தில் இயங்கிய இந்தக் கூட்டுத்தாபனத்தை ஒரு பில்லியன் இலாபத்துக்கு கொண்டுவர முடிந்தது. நிலுவையில் இருந்த அனைத்து வரிகளையும் இறுக்க முடிந்தது. இது நமக்குக் கிடைத்த வெற்றியாகக் கருத முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

லங்கா சீனிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் நவீன் அதிகார தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி, ஊவா மாகாண சபை உறுப்பினர் தர்மசேன மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி பௌசர் உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.