Aug 17

கனடாவில் டூப் இல்லாமல் சண்டைகாட்சியில் நடித்த நடிகை பரிதாபமாக பலி!

இங்கிலாந்தின்  கொலம்பியா மாகாணத்தில் உள்ள வான்கூவர் நகரில் டெட்பூல் 2  என்ற ஹாலிவுட் படத்தில் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் முதல் நடைபெற்று வருகிறது.

நேற்று காலை நேரத்தில் ஷா டவர் என்ற பகுதியில் சண்டைக்காட்சி ஒன்று படமாக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது.

காட்சியின் அடிப்படையில், மோட்டார் சைக்கிளில் ஒருவர் அசுர வேகத்தில் சாலையில் செல்ல வேண்டும்.

இதற்கு ஜோய் எஸ்.ஜே. ஹாரிஸ்  என்ற நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டு அதற்கான ஒத்திகைகளிலும் அவர் ஏற்கனவே ஈடுப்பட்டுள்ளார்.

இப்படத்தில் டோமினோ என்ற கதாபாத்திரத்தில் ஜோய் எஸ்.ஜே. ஹாரிஸ் நடித்துள்ளார்.இந்நிலையில், படப்பிடிப்பு தொடங்கியதும் சில மீட்டர் தொலைவில் இருந்து அவர் மோட்டார் சைக்கிளில் அசுர வேகத்தில் வந்துள்ளார்.

அப்போது, தரையில் இருந்து மோட்டார் சைக்கிள் காற்றில் பறந்தபோது திடீரென நடிகை தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

மோட்டார் சைக்கிள் மீண்டும் தரையில் இறங்காமல் அதே வேகத்தில் அருகில் இருந்த ஷா டவர் கண்ணாடி ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே விழுந்துள்ளது.

நடிகை தலைக்கவசம் அணிந்திருந்த நிலையிலும் படுகாயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நடிகையின் இறப்பிற்கு படிப்பிடிப்புக்குழு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகிறது.

மேலும், படிப்பிடிப்பின்போது தேவையான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றப்பட்டதா என்பது குறித்து கனேடிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.