Apr 03

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விசேட பாதுகாப்பு

இன்று திங்கட்கிழமை தொடக்கம் இலங்கையின் பிரதான நகரங்களை அண்மித்து சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

தமிழ்  சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்த பாதுகாப்புத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. 

புத்தாண்டை முன்னிட்டு அநேகமான நுகர்வோர் நகரங்களுக்கு  வருவதால் அவர்களின் பாதுகாப்பிற்காக  இவ்வாறு  பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விசேட பாதுகாப்பில் நூற்றுக்கணக்கான பொலிஸார் சீருடையிலும் சிவிலுடையிலும் ஈடுபடவுள்ளனர்.