Aug 16

கனவா??? இலட்சியம் சுமந்த எங்கள் ஆற்றலர்களை எங்கே தொலைத்தோம்!

இரவுப்பொழுது

தலையாட்டும் மரங்கள்

கலகலக்கும் இலைகள்

காட்டுப் பறவைகளின்

கனத்த சத்தம்

குளிர்காற்றை வெட்டி

மேவும் வியர்வை முள்ளுக்கம்பியுடைப்பு

நிலவை ரசித்த விழியால்

இருளை மட்டுமே உரசி

ஊடறுத்து வழிகண்டு

வியர்வை குளித்த

பயணப்பொதியில்

எஞ்சியிருந்த

பூஞ்சணம் பரவிய

ரொட்டியை துடைத்துண்டு

இலக்கு நோக்கி

இயந்திரத்துப்பாக்கியோடு

இலட்சியம் சுமந்த

எங்கள் ஆற்றலர்களை

எங்கே தொலைத்தோம்????

அங்கயற்கண்ணிகளும்

மாலதிகளின் அணிவகுப்பை

அன்று இமயமாய் வாழ்வோடு

இறுக்கி உயரப் பறந்த சிறகுகள்

சிறகிழந்து சின்னபின்னமாகி

மரியான ஆழியுள் புதைவதா???

என்றெங்கள் தேசபிதாவின்

அன்பினை மறந்தோமோ

அன்றே சனி சக்கரம் ஏறி

சண்டித்தனம் ஆடுகின்றான்.

வஞ்சகமும் சூதும் கவ்வி

வெம்பல் மாங்காய்கள்

பழம் காட்டி பவனி வர

பார்த்திருக்கும் விழியராய்.

விதைகள் உறங்குநிலையிலா???

மழையை நம்பி காத்திருப்பா???

முளைவிடுமா  வளருமா???

புதுத் தோட்டம் பூக்குமா???

கனவில் தான் வாழ்வா????

விழிப்பது எப்போது?????

லதா