Aug 16

ஒரே நாளில் பிரமாண்ட வீட்டுக்கு சொந்தக்காரியான பெண்.. பின்ணனியில் சுவாரஸ்ய தகவல்!!!

குலுக்கல் சீட்டு முறையில் பெண் ஒருவருக்கு £800,000 மதிப்புள்ள வீடு பரிசாக கிடைத்துள்ளது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரித்தானியாவின் Warrington நகரை சேர்ந்த Marie Segar என்ற பெண் தான் அந்த அதிர்ஷ்டசாலி.

Dunstan Low (37) என்ற நபருக்கு Lancashire பகுதியில் அரண்மனை போன்ற மிக பெரிய வீடு உள்ளது. வீட்டில் சகலவிதமான வசதிகள் உள்ளன.

வீடானது ஒதுக்குபுற பகுதியில் இருந்ததால் அவரால் பணிக்கு செல்ல முடியவில்லை. இதனால் Dunstanன் வருமானம் குறைய ஆரம்பித்தது.

இதையடித்து வீட்டை விற்க முடிவு செய்த Dunstan வீடு விற்பனைக்கு உள்ளது என விளம்பரம் கொடுத்தார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் வீட்டை வாங்க யாரும் வரவில்லை.

வேறு வழி மூலமாக வீட்டை விற்க முடிவு செய்த Dunstan குலுக்கல் பரிசு சீட்டு முறைப்படி வீட்டை விற்க தயாரானார்.