Apr 03

புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகளை தண்டிக்க தயார் என்றால் சர்வதேச விசாரணைக்கு தயார்

சர்வதேச விசாரணைகள் தான் தமிழர் தரப்பினருக்கு அவசியம் என்றால்  கடந்த காலத்தில்  விடுவிக்கப்பட்ட  12ஆயிரம் புலிகளை கைதுசெய்து தண்டிக்க வேண்டும்.

இதற்கு தமிழர் தரப்பு தயார் என்றால் நாமும் விசாரணைகளை முன்னெடுக்க தயார்.  என அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பினார்.

அதேநேரம் பக்கசார்பான எந்தவொரு விசாரணையும் அரசாங்கம் ஏற்காது என்று குறிப்பிட்டவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மூலம் இலங்கைக்கு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்க முடியும். ஆனால் எந்த நகர்வு எடுத்தாலும் அது இலங்கையின் நல்லிணக்கத்தை பாதிக்காத வகையில் அமைய வேண்டும்.

எமது சட்டத்திற்கும்இ அரசியல் அமைப்பிற்கும் அமைவாகவே நாம் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும் எனக் சுட்டிகாக்கட்டினார்.

அதேநேரம் சர்வ தேச நீதிபதிகள் உள்ளடக்கப்பட்ட  விசாரணைக்கு ஒருபோதும் நாம் இடமளிக்க முடியாது. அதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.