Aug 16

NAFTA பேச்சுவார்த்தை: பாலின உரிமைகள் குறித்து கனடா கவனம் செலுத்தும்

வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் (NAFTA) பாலின உரிமை பெறுவதற்கு பெண்கள் தொழில் முயற்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவதன்மூலம் பெண்ணியத்தை கொண்டுவருவதற்கு லிபரல் அரசாங்கம் விரும்புகின்றது.

இது குறித்து கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபிரீலான்ட் தெரிவிக்கையில், “கனேடியர்கள் பரந்தளவிலான சுதந்திர வர்த்தகத்திற்கு ஆதரவளித்துள்ளனர். ஆனால் வர்த்தக ஒப்பந்தங்கள் எமது தொழிலாளர்களுக்கு நியாயமற்ற தீமை என்னும்போது அவர்களின் ஆர்வம் தடுமாறுகின்றது.

எனவே வெற்றிகரமான வர்த்தக உடன்படிக்கைகளை தொடர வேண்டும். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஊதிய அதிகரிப்பு மற்றும் சிறந்த சூழ்நிலைகளை அனுபவிப்பதற்கு தொழிலாளர்களுக்கு உதவுதல் வேண்டும் என்றும் நாளை வொஷிங்டனில் நடைபெறவுள்ள முதலாவது கூட்டத் தொடரில் மேற்படி விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான வாக்குறிதியின் ஒருபகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.