Apr 03

ஜனாதிபதி வடக்கு முதல்வர் சி.வி விசேட சந்திப்பு

வடக்கு கிழக்கில் காணமல்போனவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், வேலையற்ற பட்டதாரிகளின் வாழ்வில் ஒளியேற்றுங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடத்தல் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நேரயாகக் கோரிக்கை விடுத்துள்ளார். 

வடக்கிலிருந்து இராணுவம் வெளியேறவேண்டும் என்பதற்கான காரணங்களை சுட்டிக்காட்டி வடமாகாண முதலமைச்சர் காணமல்போனவர்கள் அலுவலகம் அமைக்கப்படவேண்டுமென வலியுறுத்தியதோடு காணமலாக்கப்பட்டுள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் காணமலாக்கப்பட்டமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்படவேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வேலையற்ற பட்டதாரிகள் விரும்பும் பட்சத்தில் பொலிஸ் பரிவில் உதவி பொலிஸ் பரிசோதகர் பதவிகளில் காணப்படும் வெற்றிடங்களில் அவர்களை இணைத்துக்கொள்ளுமாறு கோரிக்கை முன்வைத்த வடக்கு முதல்வர் இராணுவ முகாம்களுக்கு அருகில் உள்ள பெண்தலைமைத்துவ குடும்பங்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரனுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.