Apr 03

வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளீர்க்க முடியாது; டிலான்

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம்  எந்தவொரு விசாரணைப் பொறிமுறைக்கும்  வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளீர்க்க முடியாது.

இதனை  அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ளவேண்டியது அவசியமாகும் என்று சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.  

காணாமல் போனோர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும்   விரைவில் தீர்வு காணவேண்டியது அவசியமாகும் என்றும் குறிப்பிட்டார்.