Apr 03

7 ஆம் திகதி இலங்கை வருகிறார் சுஷ்மா சுவராஜ்

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் இருநாட்டு அதிகாரிகளுக்கு இடையோன பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 7 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளன.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவரஜ் மற்றும் இந்திய மீன்வளத்துறை மற்றும் விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் ஆகியோரும் இப் பேச்சுவார்த்கைளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இப்பேச்சுவார்த்கைளில் மாகாண சபைகளின் மீன்வளத்துறை அமைச்சர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். விசேடமாக வட மாகாண சபை மீன்பிடி வளத்துறை அமைச்சர் கலந்து கொள்கிறார்.