Apr 03

தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் ;விஷால் அணி வெற்றி

தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் இரண்டு  ஆண்டுகளுக்கு பிறகு  ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தலைமையில்  இன்று நடைபெற்றது. 

இந்த தேர்தலில்  விஷால் அணி> கேயார் அணி> ராதாகிருஷ்ணன் அணி ஆகிய 3 அணிகள் இந்த தேர்தலில் போட்டியிட்டன.

இதற்கான  வாக்கெடுப்பு சென்னை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில்  நடைபெற்றது.

இதில் நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன், டி.ராஜேந்தர், சத்யராஜ், விஷால், இயக்குநர் சுந்தர்.சி, பாண்டிராஜ், கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா, ராதிகா சரத்குமார், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் வாக்களித்தனர். 

 ஆர்.கே.செல்வமணி, செல்வராகவன், தேவையாணி, ராதாரவி, குஷ்பு சுந்தர், ஐஸ்வர்யா தனுஷ், ரா.பார்த்திபன், தியாகராஜன், பாடகர் விஜய், நாசர், பி.வாசு, சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலரும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

மொத்தமாக 1059 ஓட்டுகள் பதிவாகி உள்ளன. இதனையடுத்து மாலை 6 மணியளவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

தொடக்கம் முதலே விஷால் அணி முன்னிலை பெற்று வந்தார். இறுதியில் 143 வாக்குகள் வித்தியாசத்தில் விஷா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

விஷாலுக்கு  மொத்தம் 476 வாக்குகள் கிடைத்தது. அதேபோல் ராதாகிருஷ்ணனுக்கு 333 வாக்குகளும் கேயார் 223 வாக்குகளும் பெற்றனர்.

இதையடுத்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக விஷால் பொறுப்பேற்க உள்ளார். இதனால் விஷால் அணியினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாகஇ நடிகர் சங்கத்துக்கு நடைபெற்ற தேர்தலிலும் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டி விஷால் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.