Apr 03

வி.ஐ.பி-2; நேரில் சென்னறார் சூப்பர் ஸ்டார்

2014இல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'வேலையில்லாப் பட்டதாரி' படத்தின்  2ஆவது பாகத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். 

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தனுஷ் கதைஇ வசனம் எழுத ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.முக்கிய கதாபாத்திரத்தில் கஜோல் நடித்துள்ளார். 

தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் கலைப்புலி எஸ்.தாணுவின் ஹவி' கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஜுலை 14ஆம் திகதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின்  கடைசி நாள் படப்பிடிப்பு இன்றுடன் முடிந்தது.  இன்றைய கடைசி நாள் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட பாடல் ஒன்றை  படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து வாழ்த்தி உள்ளார்.

இந்த தகவலை நடிகர் தனுஷ் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் அவர்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.