Aug 15

சாம்சங் கேலக்ஸி நோட் 8 டீசர்: வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இம்மாதம் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சாம்சங் வெளியிட்டுள்ள புதிய டீசரில் அந்நிறுவனத்தின் புதிய மற்றும் பெரிய ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 23-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சாம்சங் புதிய டீசரில் ஒவ்வொரு அம்சமும் முழுமையாக மாற்றப்பட்டு புதிய பெயர் பெற்றுள்ளது. இத்துடன் முடியாததை செய் (#DoWhatYouCan't) என்பதை விளக்கும் ஹேஷ்டேக் சாம்சங் பதிவிட்டுள்ளது.  

டீசரில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சார்ந்து எவ்வித தகவலும் இடம்பெறவில்லை. எனினும் புதிய ஸ்மார்ட்போனில் பெரிய டிஸ்ப்ளே மற்றும் எஸ்-பென் அம்சங்களை குறிப்பிட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி S8 சீரிஸ் போன்றே புதிய ஃபேப்லெட் 6.3 இன்ச் எட்ஜ்-டூ-எட்ஜ் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் டூயல் கேமரா செட்டப் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கேலக்ஸி நோட் 8 ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 அல்லது எக்சைனோஸ் 8895 சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதிக ரேம் கொண்டு வெளியாகும் மூன்றாவது சாம்சங் ஸ்மார்ட்போனாக நோட் 8 இருக்கும் என்றும் 3300 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஸ்ப்லிட்- ஸ்கிரீன் அம்சம் மற்றும் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. நோட் 8 ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் கோல்டு என மூன்று நிறங்களில் வெளியாகும் என்றும் சாம்சங் டெக்ஸ் வசதியும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.