Aug 15

வன்கூவரில் சுற்றுலா பேரூந்து விபத்து

வன்கூவர் நகர மத்திய பகுதியில் சுற்றுலா பேரூந்து ஒன்றுடன் தொடர்புபட்ட விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 49 வயது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதனை வன்கூவர் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றின் அருகே நின்றிருந்த வேறு சிலரும் காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவர்களில் வயதான முதியவர் ஒருவர் பாரதூரமான காயங்களுக்கு உள்ளானதாகவும், 15 வயது சிறுமி ஒருவர் சிறிய அளவிலான காயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்தவர்கள் என அனைவருமே சுற்றுலா பயணிகள் என்பதனை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பேருந்து மிகவும் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த வேளையையிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது என்று தெரிவித்துள்ள அதிகாரிகள், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.