Apr 03

மீண்டும் வில்லனாக நடிக்க உள்ள பிரசன்னா

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிய பிரசன்னா மீண்டும் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

தெலுங்கில் சாய் தரம் தேஜா - மெஹ்ரின் பிர்சீடா இணைந்து நடிக்க உள்ள 'ஹஜவான்' என்ற படத்தில் இவர் வில்லனாக நடிக்க உள்ளாராம்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரசன்னா மிஷ்கின் இயக்கிய ஹஅஞ்சாதே' படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த இவரது  கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது. இதையடுத்து நாயகனாகவும்இ துணை நடிகராகவும் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். 

தற்போது தனுஷ் இயக்கத்தில் பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹபவர்பாண்டி' வருகிற ஏப்ரல் 14இல் வெளியாக  உள்ளது. மறுபக்கத்தில் அவர் தற்போது 'நிபுணன்' 'துப்பறிவாளன்', ஹதிருட்டு பயலே 2' உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.