Apr 03

குழந்தை உட்பட 200இக்கும் மேற்ப்பட்டோர் மீட்பு

மத்திய மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் ஏமன் நாடுகளில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்டோர் லிபியா கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்த போது மீட்கப்பட்டனர்.

ஸ்பெயின் நாட்டின் அரசுசாரா செயல்திறன் பாதுகாப்பு வீரர்கள் கடற்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வடக்கு லிபியாவின் சப்ரதாவில் இருந்து 22 நாட்டிகல் மைல் தூரத்தில் ரப்பர் படகில் பலர் சென்று கொண்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

அவர்களை மீட்டு பாதுகாப்பாக வைத்துள்ளனர்.இதில் பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தை ஒன்றும்பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது