Apr 03

நேபாள முன்னாள் பிரதமர் பாபுராம் கைது

நேபாளத்தில் வரும் மே 14ஆம் திகதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மாதேசி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதனிடையே, பாராளுமன்றத்தில் பிரதிநிதிகள் இல்லாத கட்சிகள், உள்ளாட்சி தேர்தல்களில் தங்களது கட்சியின் சின்னங்களில் போட்டியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த உள்ளாட்சி தேர்தல் விதிமுறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட நேபாள முன்னாள் பிரதமர் பாபுராம் பட்டாராய் கைது செய்யப்பட்டார்.

தலைநகர் காத்மண்டுவில் உள்ள தேர்தல் அலுவலகம் முன்பாக இந்த போராட்டம் நடைபெற்றது.

நேபாள கம்யுனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியைச் சேர்ந்த பாபுராம் பட்டாராய், நயா சக்தி நேபாளம் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

நேபாளம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இந்தியா ஆதரவு அளித்துள்ளது. சீன அரசாங்கம் ஒரு மில்லியன் டாலர் கொடுப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.