Aug 15

சிறை மீண்ட பாதிரியாருக்கு பலத்த வரவேற்பு

வடகொரிய சிறையில் இருந்து நாடு திரும்பியுள்ள கனேடிய பாதிரியார் ஹியோங் சூ லிம்முக்கு பலத்த வரவேறபு அளிக்கப்பட்டுள்ளது.

அவரைச் சிறை வைத்தது தொடர்பில் பலருக்கும் பல்வேறு விதமான கோபங்கள், கவலைகள், விரக்திகள் உள்ள போதிலும், நேற்று அவர் மிசிசாகா தேவாலயத்திற்கு வ்ந்தபோது, அவருக்கு மிகப் பெரும் வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சுமார் இரண்டரை ஆண்டுகளின் பின்னர் மக்கள் முன் தேன்றிய அவர், அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியிலும் உரையாற்றியுள்ளார்.

இந்த உரையின் போது தனது இரண்டு ஆண்டுகாலச் சிறை வாழ்க்கையில் சந்தித்த விடயங்களை அங்கிருந்தவர்கள் மத்தியில் பகிர்ந்துகொண்ட அவர், வடகொரியாவில் தற்போது தன்னை ஒரு நிபுணராக சிலர் பார்ப்பததாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை நீண்ட காலத்தின் பின்னனர் மீண்டும் நாடு திருப்பியு்ள அவர், உடல் நலத்துடன் உள்ளதாக அவரின் மகன் தெரிவித்துள்ளார்.

வடகொரிய நாட்டுககு எதிராக செயற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு கடூழிய ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், இந்த வாரத்தில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் கடந்த சனிக்கிழமை மீண்டும் கனடாவை வந்தடைந்த அவர், தனது குடும்பத்தாருடன் மீள இணைந்து கொண்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பல்வேறு இன்னல்களை அவர் அனுபவித்துள்ள போதிலும், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும், விமான நிலையத்தில் இருந்து மரங்க்ள், காடுகள் வழியாக கடந்து வந்தபோது அவர் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டதாகவும் அவரது மகன் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.

எனினும் அவர் வடகொரிய சிறையில் இருந்த அனுபவங்கள் குறித்து தாம் இன்னமும் முழுமையாக அறிந்துகொள்ளவில்லை எனவும், அதற்கு இன்னமும் நேரம் கிடைக்கவில்லை என்றும், எனினும் அவரது தற்துனிபு பாதிக்கப்படவில்லை என்பது அவரது தோற்றத்தில் இருந்து தெரிவதாகவும் ஜேம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வடகொரிய சிறையில் இருந்து வெளிவந்துள்ள இவர், தனது முதலாவது பொது நிகழ்வாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை மிசிசாகா தேவாலயத்தில் நடைபெறவுள்ள வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.