Apr 03

இந்தியாவின் மிக நீள சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் மோடி

காஷ்மீர் மாநிலத்தில் ஜம்முவையும் காஷ்மீரையும் இணைக்கும் வகையில் செனானி மற்றும் நஷ்ரி இடையே மலைப்பகுதியில் 9.2 கி.மீ. தூரத்துக்கு சுரங்கம் அமைத்து சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.

இந்த பாதை மூலம், ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் பயணம், 2 மணி நேரம் குறையும். இந்த பாதையால் தினமும் ரூ.27 லட்சம் அளவுக்கு எரிபொருள் சேமிக்கப்படும்.

பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு தாங்கும் வகையில் பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

கடும் பனிப்பொழிவு, மழை போன்றவற்றால் பாதிக்கப்படாதவாறு வகையில் கட்டப்பட்டுள்ளது.