Apr 03

இந்தியாவில் தீவிரவாதத்தை மிஞ்சிய காதல்

இந்தியாவில் தீவிரவாத தாக்குதலை விட, காதலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் என தெரிய வந்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தின்படி, 2001ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை 38,585 கொலைகள், 79,189 தற்கொலைகள், 2.6 இலட்சம் கடத்தல் வழக்குகள் பதிவாகி உள்ளன.

இவை அனைத்திற்கும் பின்னால் இருக்கும் ஒரே காரணம் காதல் என்றே பதிவாகி உள்ளது. அதேசமயம் கடந்த 15 ஆண்டுகளில்  தீவிரவாத தத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,000. 

தீவிரவாததத்தால் உயிரிழப்பவர்களை விட காதலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட 6 மடங்கு அதிகமாகும்.

காதலுக்காக அதிகமான கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா முதல் இடத்திலும், .பி. 2வது இடத்திலும், மகாராஷ்டிரா 3வது இடத்திலும், தமிழகம் 4 ஆவது இடத்திலும், .பி. 5ஆவது இடத்திலும் உள்ளன.

இவற்றில் காதல் கொலை மற்றும் தற்கொலைக்கு அதிக காரணம் சாதி கட்டுப்பாடுகள் என கூறப்படுகிறது.காதல் தற்கொலைகளில் மேற்குவங்க மாநிலம் முதலிடம் பிடிக்கிறது.

கடந்த 14 ஆண்டுகளில் 15,000 க்கும் அதிகமான தற்கொலைகள் நடந்துள்ளன. 2ஆவதாக தமிழகத்தில் 9405 தற்கொலைகள் நடந்துள்ளன.

35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காதலால் தற்கொலை செய்து கொண்டவர்களில் ஆண்களை விட பெண்களே அதிகம்.