Apr 03

பிரான்ஸில் களியாட்ட நிகழ்வில் வெடிப்பு

வட பிரான்ஸில் களியாட்ட நிகழ்வொன்றில்  இடம்பெற்ற தீ வளர்ப்பின் போது  ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில்  சிக்கி  நகர மேயர் உட்பட குறைந்தது 18  பேர் காயமடைந்துள்ளனர்.

வில்லேபின்ட் நகரில்  இடம்பெற்ற ஜெலோ களியாட்டத் திருவிழாவின்  இறுதியிலேயே  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி சம்பவத்தில் தாயொருவரும் அவரது குழந்தையும் உட்பட 5  பேர் படுகாயத்துக்குள்ளாகியுள்ளனர்.