Aug 14

பட்ஜெட் விலையில் ரெட்மி 5A ஸ்மார்ட்ஃபோன்

சீன நிறுவனமான சியோமியின் ரெட்மி ஃபோன்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்ஃபோன்  இந்த மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சியோமியின் ரெட்மி நோட் 5A ஸ்மார்ட்ஃபோனின் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

சியோமியின் ரெட்மி நோட் 5A ஃபோனில், 5.5 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 425 சிப்செட்டுள் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஸ்டோரேஜ் கொண்டது. 7.1 நௌகட், 3080 mAh பேட்டரி திறன், 13 மெகாபிக்சல் ரியர் கேமரா, 5 மெகா பிக்சல் முன்பக்க கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த ஃபோன் 10,000 ரூபாய் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.