Apr 03

இந்தோனேசியாவில் மண்சரிவு அனர்த்தம்

 இந்தோனேசியாவில் இடம்பெற்ற  பாரிய  மண்சரிவில் சிக்கி குறைந்தது 28  பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 இதுவரை இருவரின் சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. ஏனைய 26  பேரும் மண்சரிவில் புதையுண்டுள்ள நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 கிழக்கு ஜாவாவில் பொனொரோகோ மாவட்டத்திலுள்ள பனாரன்   கிராமத்தில்  இடம்பெற்ற  மண்சரிவில் சிக்கி 32  வீடுகள் புதையுண்டும் சேதமடைந்தும் உள்ளதாக பிராந்திய அதிகாரிகள்  கூறுகின்றனர்.

 தொடர்ந்து  அடை மழை   பெய்து வருவதால் மீட்புப் பணிகள் தாமதமடைவதாக  அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.