Apr 03

கொலம்பியாவில் பாரிய அனர்த்தம்; 250 பேர் பலி; 400 பேர் காயம்; 200 பேரைக் காணவில்லை

கொலம்பியாவில் இடம்பெற்ற பாரிய மண்சரிவொன்றில் சிக்கி   254 பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதுடன் 400  க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்படி மண்சரிவையடுத்து 200  பேருக்கும் அதிகமானோர் காணாமல்போயுள்ளனர்.

அதேசமயம் காயமடைந்தவர்களுக்கு மருத்தவ சிகிச்சைகளை வழங்கும் நடவடிக்கையில்  கொலம்பிய செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள் ஈடுபட்டனர்.

அத்துடன் அந்த தொண்டர்கள் இந்த மண்சரிவால் பிரிந்த குடும்ப உறுப்பினர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளவும் வசதிகளை  ஏற்படுத்தித் தரும் செயற்கிரமத்தையும் முன்னெடுத்தனர்.

இந்நிலையில்  மீட்பு நடவடிக்கைகளில்  சுமார் 1,100  படைவீரர்களும் பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அந்நாட்டின் தென் மேற்கு பிராந்தியத்திலுள்ள மேற்படி மொகோவோ நகரில் அடை மழை காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கையடுத்தே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

மண்சரிவு இடம்பெற்ற இடத்திற்கு அருகில் மேற்படி அனர்த்தத்தின் போது  காணாமல் போன தமது  குழந்தைகளையும் உறவினர்களையும் தேடி    மக்கள் கதறி அழுத வண்ணம் கூடியிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.