Apr 02

அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டுமே தவிர விமல் வீரவன்ச அல்ல: மனோ கணேசன்

சிறையில் வாழும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டுமே தவிர விமல் வீரவன்ச அல்லவென தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு தமக்கிருப்பதாகவும் இந்த வருடத்திற்குள் அரசாங்கம் நிறைவேற்றும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியை சந்தித்து இது தொடர்பில் இரண்டு வருடங்களுக்குள் செயற்றிட்டமொன்றைத் தயாரித்துக்கொள்ளுமாறு தாம் ஆலோசனை வழங்கியதாகவும் மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பு – மட்டக்குளி பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இக்கருத்துக்களை வெளியிட்டார்.