Mar 01

சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அவசரமாக இன்று கூடுகிறது: மகிந்த பங்குகொள்வாரா?

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம், இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்துக்கு, முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

கட்சியின் மத்தியக்குழு, நிறைவேற்றுக்குழு மற்றும் அகில இலங்கை பொதுக்குழு ஆகியனவே, கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடவுள்ளது.