Aug 13

வழர்ந்து வரும் இளைய சமுதாய சிறர்களின் மனதை புண்படுத்தியதுடன் முதிய கலைஞர்களை அவமதித்ததுமான கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய 'ஜோதி விழா 2017'' இன் முதல் நாள் நிகழ்வு

ஜோதி விழா 2017 இல் முதல் நாள் நிகழ்வின் முதல்  நிகழ்வாக பிறபகல் 1: 00 மணியளவில்  நடைபெற இருந்த ரொறொன்ரோ வாழ்  சிறுவர்முதல் முதியவர்வரை பங்குபற்றி இடம்பெற இருந்த இன்னிசை பாடல்  நிகழ்வொன்று அன்று  இரவு நடைபெற இருந்த இந்திய கலைஞர்களுக்கு  இசைவழங்க ஏற்பாடு செய்யப்பட்ட இசைக்கு பொறுப்பானவராலும் அன்றைய விழா அமைப்பாளர்களினாலும்  எந்தவித மனிதாபிமானமும்  இன்றி நிறுத்தப்பட்டது.

இது எப்படி ஒரு மனிதாபிமானமற்ற செயல் எனில் இவ் இசை நிகழ்வில் பாடல்களை பாடவிருந்த ஆறு (6) 10 வயதில் இருந்து 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களினதும்,5 பாடர்களினதும் மற்றும் 8 இசை வழங்க என வந்திருந்த இசை கலைஞர்களினதும் வாத்திய கருவிகளுக்கான ஒலிவாங்கிகள் சரி செய்யபட்டு அவர்கள் அனைவரும் இசை வழங்க முற்றிலும் தயாராக இருந்த நிலையில் நிகழ்ச்சி தடைசெய்ய பட்டது எனும் போது இது பற்றி விரிவாக சொல்ல வேண்டியிருக்கிறது.

1. அவ் இசை நிகழ்வில் பாடவென ஆறு (6) 10 வயதில் இருந்து 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்  பலநாட்க்கள் பாட்டு பயிற்ச்சி பெற்று தாங்களும் ஜோதி விழாவில் பங்கு பெறப்போகின்றோம் என்ற பெரும் சந்தோஷ வெள்ளத்தில் அங்கு வந்திருந்தார்கள் . அவர்களுக்கோ மாபெரும் ஏமாற்றம் ,அவர்களின் மனம் எவ்வளவு தூரம் புண்பட்டிரும்.

2. அவர்களை தய்யர்செய்த பெற்றோர்க்கோ மாபெரும் ஏமாற்றம் எப்படியெனில் அவர்கள் குழந்தைகள் எம்பெருமான் ஶ்ரீ ஐயப்ப சுவாமி முன் பாடப்போகிறார்களே என்ற பேர் அவாவுடன் இருந்திருப்பார்கள்.

3. அவர்களை தயார் செய்த இசை கலைஞர்களை அவமதித்தமை.

4. அவ் நிகழ்வில் தாங்களும் பாடப்போவதாக பாடல் பயிற்ச் சிசெய்து வந்திருந்த ஐந்து (5) பாடகர்களை அவமதித்தமை.

5. அவ் இசை நிகழ்வுக்கென இசை வழங்க வென முழுமையா பயிற்ச்சி செய்து வந்திருந்த 7 வாத்திய கலைஞர்களை அவமதித்தமை.

6. இசை நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தவரை பெரிதும் அவமதித்தமை.

ஒட்டுமொத்ததில் இந்த இசை நிகழ்வு இரத்து செய்யப்பட்டமை  சிறார்களின் மனதை புண்படுத்தி மனவேதனை அடைய செய்ததுடன்,பாடவந்த பெரியோர்க்ள், இசை கலைஞர்கள் என எல்லோரும் அவமாதிக்கப்பட்டார்கள்.

இந்த நிகழ்வினை இரத்து செய்வதற்க்கு காரணமாக இருந்த அந்த இரவு இசை நிகழ்வுக்கு இசைக்கு பொறுப்பாக இருந்த அந்த நபர் எவ்வளவு தூரம் ஒரு மனிதாபிமானம் அற்றவராக இருந்திருக்கிறார் எனும் போது மனம் வேதனைக்குள்ளாகிறது. அவர் அந்த இசை நிகழ்வினைபற்றி முற்று முளுதாக கேட்டறிந்து ஆக குறந்த ஒரு மணி நேரமாவது அந்த சிறார்களுக்கு ஒதுக்கி பாட விட்டிருக்க வேண்டும் . ஒரு இசைக்கலைஞன் மற்றை இசைக்கலைஞனுக்கும் வழர்ந்து வரும் இசை கலைஞர்களுக்கும் செய்ய வேண்டிய அடிப்படையான குறந்த பட்ஷ மனிதாபிமானமான விடையம் . 

மேலும் இது போன்ற தவறு இடம்பெறாவண்னம் பார்த்து கொள்ள வேண்டிய பொறுப்பு ஶ்ரீ ஐயப்பன் ஆலய நிர்வாகதினரை சார்ந்தது.

நன்றி

சி.சிவசோதி

 ஶ்ரீ மணிகண்டன் ஐயப்பன் மேல் அளவிட முடியா பக்தியும் கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயத்தின்மேல் பேரன்பும்   கொண்ட அடியவன்.