Aug 13

இரண்டு முக்கிய சட்ட மூலங்களை வாபஸ் பெற்றது அரசாங்கம்

பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்த குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலத்தை மீளப் பெற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நீதித்துறைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதியை அங்கீகரிப்பதற்கான பிரேரணையையும் மீளப்பெற்றுக்கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டள்ளது.

பாராளுமன்றத்தில் 11-08-2017 வெள்ளிக்கிழமை சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் இருந்து விலக்கிக் கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரியவிடத்தில் குறிப்பிட்டார்.