Aug 12

வரி மறுசீரமைப்பு குறித்து மக்களுக்கு அதிகமாக தெளிவூட்டப்பட வேண்டும்

வரி மறுசீரமைப்பு குறித்து மக்களை கூடுதலாக தெளிவூட்ட வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது. இலங்கையில் வரி மறுசீரமைப்பு தொடர்பில் மக்கள் தெளிவூட்டப்படுவது போதுமானதல்ல என தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியம், வரி மூலம் எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய நலன்கள் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2016 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்தினால் வட் வரி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் 11 சதவீதமாக இருந்த வட் வரியானது  15 சதவீதமாக உயர்ந்தது. இதற்கு பல்வேறு காரணங்கள் அடிப்படையாக கானப்பட்டது.

தற்போதுள்ள வருமான வரிமுறைமை தொடர்தேட்சையான மாற்றங்களை எற்படுத்த்தியது. ஆனாலும் பொதுமக்களுக்கு குறித்த வரிகள் தொடர்பில் தெளிவுப்படுத்தினால் மாத்திரமே எதிர்காலத்தில் அதன் அவசியம் நன்மை தொடர்பில் மக்கள் நம்பிக்கையுடன் செயற்படுவர். 

அரசாங்கத்தினால் கடந்த மாதம் 4 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வருமான வரி கட்டமைப்புக்களுக்கான சட்டமூலம் இலங்கையில் வருமான வரி அமைப்பில் நிர்வாக ரீpதியானதும் வரி செழுத்துகை தொடர்பானதும் பாரிய  மாற்றங்களை ஏற்படத்தும் மேலும் உள்நாட்டு திறை சேரி முகாமைத்துவ தொடர்பாடல் திட்டம் தற்போது நிதியமைச்சில் ஆரமப்பிக்கப்படவுள்ளது. இதன்மூலம் இலங்கையில் நிதியியல் குறிக்காட்டிகளை மக்களுக்கு இலகுவாக விளங்கப்படுத்த முடியும். 

இவ்வருடத்தில் மாத்திரம் இலங்கை இரண்டு பாரிய அனர்த்தங்களை சந்தித்திருந்தது. வெள்ளம், வரட்சி போன்றவற்றினால் ஏற்பட்ட பாதிப்பினால் இலங்கையின் பொருளாதார குறிக்காட்டிகளில் மாற்றம் ஏற்பட்டிருந்தது.

இது வரவு செலவு திட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். மீள் கட்டுமாணம் புணர்வாழ்வு போன்றவற்றுக்கும் இலங்கை அரசாங்கம் அதிகமான நிதியை ஒதிக்கீடு செய்கின்றது. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி அரசாங்கம் செயற்பட வேண்டும். இது தொடர்பில் மக்களுக்கும் தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.