Aug 12

வடக்கு தெற்கு மக்கள் சம உரிமைகளை பெற்றுக்கொள்ளவே புதிய அரசியல் அமைப்பு

நாட்டை பிளவுபடுத்தவோ, சர்வதேச சக்திகளுக்கு வாய்ப்பை வழங்கவோ புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படவில்லை. வடக்கு தெற்கு மக்கள் அனைவரும் சம உரிமைகளை பெற்றுக்கொள்ளவே புதிய அரசியல் அமைப்பு அவசியப்படுகின்றது  என புதிய அரசியல் அமைப்பு  தொடர்பாக மக்கள் கருத்தறியும் ஆணைக்குழுவின் தலைவர்  சிரேஷ்ட சட்டத்தரணி  லால் விஜயநாயக  குறிப்பிட்டார்.

 புதிய அரசியல் அமைப்பின் மூலமாக நாட்டின் பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என்ற வாக்குறுதிகளை வழங்கியே இந்த அரசாங்கம் மக்கள் ஆணையை பெற்றுக்கொண்டது. ஆகவே  வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்