Aug 12

பதில் கூற மறுத்தார் நீதியமைச்சர் விஜயதாச

நீதி அமைச்சருக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டுவரவுள்ளதாக கூறப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து பதில் கூற மறுத்தார்  நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் .

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள்  தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ள  நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நீதி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

எனினும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எந்தவித பதிலையும் தெரிவிக்காது அமைச்சர் விஜயதாஸ ராஜபக் அங்கிருந்து வெளியேறினார். தன்னால் இந்த கேள்விக்கு பதில் தெரிவிக்க முடியாது என அவர் அவ்விடத்தை விட்டு வெளியேறினார்.

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் ஒரு சில செயற்பாடுகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாரளுமன்ற உறுப்பினர்கள் 18 பேர்  அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவர தீர்மானித்துள்ளதாகவும்  அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக கூறப்படுகின்றது.