Aug 12

நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக கொண்டு வந்ததில்லை: ஸ்டாலின்

சட்டசபையில் தமிழக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக கொண்டு வந்ததில்லை என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

சென்னையில் பத்திரிகை நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக அடிபணிந்து போவதற்கு பா.ஜ, தான் காரணம். சட்டசபையில் திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததில்லை.

முன்பு நடந்தது நம்பிக்கை ஓட்டெடுப்பு என்பது கூட தெரியாமல் முதல்வர் பழனிசாமி தெரியாமல் உள்ளார். விரைவில் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி கட்சராயன் ஏரிக்கு செல்வதுடன், தமிழகம் முழுதும் திமுகவினர் தூர்வாரிய குளங்களை பார்வையிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.