Apr 02

உத்தரவுகளில் கையெழுத்து போடாமல் தனி அறைக்குச் சென்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

வெள்ளை மாளிகையில் செயல் உத்தரவுகளில் கையெழுத்திடும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் அதிபர் ட்ரம்ப். துணை அதிபர் மைக் பென்ஸ் அவரை விரட்டிச் சென்று கையெழுத்து பெற்றார்.

வெள்ளியன்று நடந்த செயல் உத்தரவு நிகழ்ச்சியின் போது வெள்ளை மாளிகை செய்தியாளர்கள், அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்து முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் ஃபிளின் வாக்குமூலம் அளிக்க ஒப்புக் கொண்டுள்ளது பற்றி கேள்விக்கணைகளைத் தொடுக்க 70-வயது ட்ரம்ப் கேள்விகளைத் தவிர்க்க வெளியேறி வேறொரு அறைக்குச் சென்றார்.

இதனையடுத்து மைக் பென்ஸ் அவரை விரட்டிச் சென்று செயல் உத்தரவுகளில் கையெழுத்து பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

அயல்நாட்டு வாணிப துஷ்பிரயோகங்களை அடையாளங்கண்டு இலக்கு வைக்கும் 2 செயல் உத்தரவுகளில் ட்ரம்ப் சென்ற அறைக்குள் சென்று துணை அதிபர் பென்ஸ் கையெழுத்துப் பெற்றார்.

இதில் ஒரு உத்தரவு, அமெரிக்காவின் மிகப்பெரிய வணிகக்கூட்டாளிகளினால் வாணிப துஷ்பிரயோகங்கள் மற்றும் ஏமாற்று வேலைகளை கண்டறிய 90 நாட்கள் ஆய்வு செய்யும் உத்தரவாகும்.

இன்னொரு உத்தரவு பொருட்களை அமெரிக்காவில் குவிக்கும் போக்குக்கு எதிரான சட்டங்களை திறம்பட நடைமுறைப்படுத்துவது பற்றியாகும். அதாவது அயல்நாட்டு உற்பத்தியாளர்கள் அமெரிக்க நிறுவனங்களைப் பின்னுக்குத்தள்ளி தங்கள் பொருட்களை நியாயமற்ற விலைகளைத் தடுக்கும் உத்தரவாகும்.