Aug 12

சீக்ரெட் அரட்டைகளுக்கு உதவும் சரஹா அப்ளிகேஷன்

நம் பெயர் தெரியாதபடி யாருக்கு வேண்டுமானாலும் மெஜெஜ் செய்ய முடியும் வசதியை அளிக்கும் சரஹா மெசென்ஜர் அப்ளிகேஷன் இந்தியாவில் அறிமுகமாகி வைரலாகியுள்ளது.

சரஹா இதுவரை எகிப்து, சவுதி அரேபியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. இப்போது, இந்தியாவிலும் வந்திருக்கிறது சரஹா.இந்த அப்ளிகேஷன் மூலம் பேஸ்புக், ஸ்னாப்சாட் மற்றும் ட்விட்டரில் மொட்டை கடுதாசி போல பெயர் இல்லாத மெசேஜ் அனுப்ப முடியும். இதன் மூலம் யார் வேண்டுமானாலும் யாருக்கும் மெசேஜ் அனுப்பலாம். மெஜெஜ் அனுப்பியது யார் என்று பெறுபவருக்குத் தெரியாது.

ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் மொபைல்களுக்கு ஏற்ற சரஹா அப்ளிகேஷன் இந்தியாவில் அறிமுகமாகி வைரலாகி வருகிறது. மொபைல் அப்ளிகேஷன் மட்டுமின்றி கம்ப்யூட்டரில் பயன்படுத்த வசதியாக https://www.sarahah.com என்ற இணையதளமும் உள்ளது.

ஆங்கிலம் மற்றும் அரபு மொழிகளில் மட்டுமே சரஹா அப்ளிகேஷனை பயன்படுத்தலாம்.