Aug 12

அட்லான்டிக் கனடாவின் தொலைதொடர்பு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

அட்லான்டிக் கனடாவின் பல பிராந்தியங்களிலும் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தொலைதொடர்பு தடை, அந்த பிராந்தியத்திற்கான தொலைதொடர்பு கட்டமைப்பு தொடர்பிலான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தோற்றுவித்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள நிபுணர்கள், தொலைதொடர்பு வலையமைப்பில், குறிப்பாக கண்ணாடி நார் வலைப் பின்னலில் பல்வேறு இடங்களிலும் தொடர்பு துண்டிப்பு ஏற்பட்டுள்ளமையானது கவலையளிக்கும் விடயம் என்று தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான விரும்பத் தகாத, எதிர்பார்க்கப்படாத சம்பவங்கள் இடம்பெறுவது, ஏனைய இடங்களிலும், எதிர்காலத்திலும் இவ்வாறான நெருக்கடிகளைச் சமாளிக்கும் நிலை குறித்த கேள்விகளை எழுப்புவதாக, நீணட காலமாக ரொரன்ரோவில் குறித்த இந்த துதறையில் பணியாற்றிவரும் ஆலோசகள் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொலை தொடர்பு தடை காரணமாக, Telus, Bell, Virgin மற்றும் Koodo போன்ற அனைத்து தொலை தொடர்பு சேவைகளும் செயலிழந்ததுடன், அவரச சேவைகளும் தொடர்பற்று போகும் நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட இந்த சேவைத் தடங்கல் குறைந்து மூன்று மணி நேரத்திற்கு பல பகுதிகளிலும் நீடித்தமை குறிப்பிடத்த்ககது.