Aug 12

தென் மேற்கு வேல்ஸில் மண்சரிவு ஏற்படும் அபாயம்: பொதுமக்கள் வெளியேற்றம்

தென் மேற்கு வேல்ஸின் இஸ்டலிஃபேரா (Ystalafera) எனும் பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள பொதுமக்கள் வேறு பகுதிகளுக்கு வெளியேறியுள்ளனர்.

சுமார் 10 குடும்பங்கள் குறித்த பகுதியை விட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) உடனடியாக வெளியேறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த பகுதியில் மண்சரிவு ஏற்படுவது வழமையாக உள்ள நிலையிலேயே நேற்று மேற்படி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அந்த பகுதியில் இருக்கும் பட்சத்தில் அவர்களின் வீடுகள் மண்ணுள் புதையும் வாய்ப்பு அதிகம் உள்ளதென தெரிவித்த அதிகாரிகள், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதே உத்தமம் என தெரிவித்துள்ளனர்.

இதே வேளை, கடந்த 2012 ஆம் ஆண்டு ஏற்பட்ட மண்சரிவின் போது பல வீடுகள் மண்ணுள் புதையுண்டமை குறிப்பிடத்தக்கது.