Aug 12

போல்ட்டன் ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்து பாதிப்பு

மஞ்செஸ்டரில் உள்ள போல்ட்டன் ரயில் நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள கட்டுமானப்  பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஓகஸ்ட் 27 ஆம் திகதி வரை போல்ட்டன் ரயில் நிலையத்தின் சேவைகள் பல இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரெஸ்டன் மற்றும் மஞ்செஸ்டர் ஆகிய பகுதிகளுக்கு இடையில் மின்சாரத்தின் மூலம் இயங்கும் ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் வகையிலேயே குறித்த கட்டுமானப்  பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இடைநிறுத்தப்பட்ட ரயில் சேவைகளுக்கு மாற்றீடாக பேரூந்து சேவைகள் பணியில் ஈடுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.