Aug 12

வட மாகாண சபையின் எதிரக் கட்சி தலைவர் பதவி விலக வேண்டும் ; மு.தம்பிராசா

வட மாகாண சபையை கலைக்க வேண்டும் என கூறும் மாகாண சபையின் எதிரக் கட்சி தலைவர் சி.தவராசா வேண்டுமானால் தனது பதவியை முதலில் இராஜினாமா செய்ய வேண்டும் என அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைமை தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த தம்பிராசா தமிழ் மக்களின் இன்றைய நல்வாழ்வுக்காக உருவாக்கப்பட வட மாகாண சபை ஆட்சியை கலைக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கூறுவதை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார்.

இவ்வாறு கூறுகின்ற தவராசா முதலில் தன்னுடைய உறுப்பினர் மற்றும் எதிர்கட்சி தலைவர் பதவியை உடனடியாக துறக்க வேண்டும் என தெரிவித்துள்ள அவர், பதினாறாயிரத்துக்கு மேற்பட்ட முன்னால் போராளிகளின் குடும்பத்தினருக்கு தேவையான வாழ்வாதார உதவிகளை வழங்க அனைத்து நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.