Aug 12

கனேடிய படையினர் அமைத்த முகாமில் நிரம்பி வழியும் அகதிகள்

கியூபெக்கின் அமெரிக்காவுடனான எல்லைப் பகுதியில், கனேடிய படை வீரர்கள் அமைத்துள்ள முகாம் அரசியல் தஞசம் கோருவோரால் நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்படுகிறது.

கனேடிய படை வீரர்கள் இந்த தற்காலிக கொட்டகைகளை, அகதிகள் விவகாரத்தினை கையாளும் அதிகாரிகளுக்கு உதவும் வகையில் அமைத்துள்ள நிலையில், அந்த கொட்டகை தற்போது அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களால் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக அண்மைய நாட்களாக கியூபெக் – அமெரிக்க எல்லைப் பகுதிகள் ஊடாக கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுளைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அவ்வாறு புதிதாக கனடாவினுள் நுளையும் பலரும், பேரூந்துகள் மூலமாக குறித்த அந்த கொட்டகைப் பகுதியில் கொண்டுவந்து இறக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில், குறித்த அந்த தற்காலிக கொட்டகையில் சுமார் 500 பேர் வரையில் தங்கியிருக்க முடியும் எனவும், அங்குள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

களத்தில் சுமார் 100 இராணுவத்தினர் இறக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களால் 500 பேரைத் தங்கவைக்கக்கூடிய் 25 கொட்டகைகளை எந்த வேளையிலும் அமைத்துக் கொள்ள முடியும் என்றும் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களுக்கான மின்சார வசதிகள், வெப்பமாக்கி வசதிகள் என்பவற்றையும் ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.