Apr 02

பொறுப்புக் கூறல் நடைபெறப் போவதில்லை: சுரேஷ்

இலங்கையின் பொறுப்புக் கூறல் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஜெனீவா கூட்டத் தொடரில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கின்ற போதிலும், அதிலுள்ள விடயங்களை நிறைவேற்றுவதில்லை என்பதில் இலங்கை அரசாங்கம் தெளிவாகவே இருப்பதாக ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருக்கின்றார்.

"ஜெனீவா தீர்மானம் வெளிவரும் நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட முக்கிய தலைவர்கள் இராணுவத்தை விசாரிக்க மாட்டோம் எனக் கூறிவரும் நிலையில் பொறுப்புக் கூறல் என்பது நடைபெறப்போவதில்லை என்பதைத்தான் அது உணர்த்துகின்றது" எனவும், அரசியலமைப்புச் சீர்திழருத்தத்தின் மூலமாக தீர்வு ஒன்றை எதிர்பார்க்க முடியாத நிலையே இருப்பதாகவும் ஞாயிறு தினக்குரலுக்குக் கருத்து வெளியிட்ட சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

"இராணுவத்தை விசாரணைக்குள்ளாக்கப்போவதில்லை என ஜனாதிபதி உட்பட முக்கியமான தலைவர்கள் சொல்லிவருகின்றார்கள். பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடிய அவர்களின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் சொல்கின்றார்கள். இந்த நிலையில் விசாரணைககுழு ஒன்றின் அவசியம் இல்லாமல் போகின்றது. என்னைப் பொறுத்தவரையில் இந்த நடைமுறை முற்றாக நடைபெறப்போவதில்லை.

இதில் காணி விடுவது போன்ற விடயங்கள் சொல்லப்படலாம். அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் பல கேள்விகள் உள்ளன. அண்மையில்தான் தேவதாசன் என்பவருக்கு 20 வருட சிறைத்தண்டனை வழிங்கப்பட்டது. அவர் ஏற்கனவே 10 வெருடங்களை சிறையில் களித்தவர். இந்த நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நம்பிக்கை கொள்ள முடியவில்லை.

இவர்கள் இனி சொல்லப்போவது அரசியல் சாசனம்தான். அதிலும் என்ன நடைபெறும் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது. ஒன்று எமக்குத் தெளிவாகத் தெரிகின்றது. இந்த வருடமும் அடுத்த வருடமும் தேர்தல் ஆண்டுகளாகவுள்ளன. மாகாண சபைத் தேர்தல், உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் இவ்வருடத்தில் நடைபெறவுள்ளன. அதில்தான் அவர்களுடைய கவனம் உள்ளது.

இந்த நிலையில் மகிந்த ராஜபக்‌ஷ தரப்பினர் தமக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க அரசாங்கம் விரும்பாது. அரசியலமைப்பு சீர்திருத்தம் என்பதை வெறுமனே பத்திரிகைச் செய்திகளுக்காக அரசாங்கம் சொல்லிக்கொண்டிருக்கலாமே தவிர, அதற்கான அரசியல் சூழல் இங்கு இல்லை.

அரசாங்கம் உண்மையாகவே இவற்றைச் செய்யவிரும்பியிருந்தால் இவர்கள் அதிகாரத்துக்கு வந்து ஆறு மாததத்துக்குள் இவற்றைச் செய்ய முற்பட்டிருந்தால் அது சாத்தியமாகியிருக்கலாம். இப்போது பிரச்சினைகள் அதிகமாகிவிட்டது. அரசாங்கத்துக்கு நெருக்கடிகள் தீவிரமாகிவிட்டது. இந்த நிலையில் இதனை அரசாங்கத்தினால் செய்ய முடியாது.

ஆக, பொறுப்புக்கூறலும் நடைபெறப்போவதில்லை. அரசியலமைப்பு மூலமான தீர்வும் கிடைக்கப்போவதில்லை என்பதுதான் இன்றைய யார்த்தம்" எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.